முகப்பு /புதுச்சேரி /

குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு.. கோரிக்கை விடுத்த கண்டமங்கலம் மக்கள்..

குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு.. கோரிக்கை விடுத்த கண்டமங்கலம் மக்கள்..

X
சாலை

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

Pondicherry News : புதுச்சேரி அருகே குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள் மற்றும் கால்நடைகள் விழுந்து பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்து கண்டமங்கலம் அருகே பூஞ்சோலைகுப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை இருந்துள்ளது. இந்நிலையில் அங்கு புதிய குடிநீர் குழாய் அமைப்பதற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு கிராமம் நெடுக்க பெரிய பள்ளங்கள் தொண்டப்பட்டது.

ஆனால் இதுவரை அங்கு புதிய குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் அங்கு வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கால்நடைகள் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

இதனால், குடிநீர் குழாய் அமைக்க கால தாமதமாவதால் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று புதுவை விழுப்புரம் பைபாஸ் சாலைகள் காலி தண்ணீர் குடங்களுவுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், பூஞ்சோலை குப்பம்கிராமத்தில் விரைவில் குடிநீர் குழாய்கள் அமைத்து மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்த்து தொண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்று அதிகாரியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

First published:

Tags: Local News, Puducherry