முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் பள்ளத்தில் சிக்கிய பசுமாடு.. களத்தில் இறங்கி மீட்ட சமூக ஆர்வலர்கள்..

புதுச்சேரியில் பள்ளத்தில் சிக்கிய பசுமாடு.. களத்தில் இறங்கி மீட்ட சமூக ஆர்வலர்கள்..

X
பள்ளத்தில்

பள்ளத்தில் சிக்கிய பசுமாடு

Pondicherry News : புதுச்சேரி அடுத்த பெரியகாட்டு பாளையம் கிராமத்தில் பள்ளத்தில் மாட்டிக் கொண்ட மாட்டை சமூக ஆர்வலர்கள் மீட்டனர்.

  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மதலப்பட்டு பஞ்சாயத்துக்கு உள்ளடங்கிய பெரியகாட்டு பாளையம் கிராமத்தில், திலகவதி என்பவர் கணவர் மற்றும் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் தனது வயதான தாயுடன் வசித்து வருகிறார். இவர், வருமானத்தை ஈட்டி தரும் வகையில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டி வந்த நிலையில், மாலை நேரத்தில் பசுமாடு ஒன்றை காணவில்லை என்று இரவு நேரம் முழுவதும் தேடினார் திலகவதி.

மீட்கப்பட்ட பசுமாடு

பிறகு விடியற்காலையில் குப்பை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த மாடு தவறி விழுந்து நிலையில் இரவு முழுவதும் அந்த குப்பை கொட்டும் இடத்தில் இருந்துள்ளது. காலையில் இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் பசு மாட்டினை மீட்டு திலகவதியிடம் ஒப்படைத்தனர். அப்போது திலகவதி தனக்கு உதவி செய்த சமூக ஆர்வலர்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுது வாழ்த்துக்கள் கூறினார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry