முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் மலர் மழை பொழிந்து முதல்வரை வாழ்த்திய ஒப்பந்த ஊழியர்கள்!

புதுவையில் மலர் மழை பொழிந்து முதல்வரை வாழ்த்திய ஒப்பந்த ஊழியர்கள்!

X
முதல்வரை

முதல்வரை வரவேற்ற ஊழியர்கள்

Puducherry News | புதுவையில் அரசு துறைகளில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்த முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் வாகனம் மீது மலர்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது விதிகளை மீறியதாக கூறி பல்வேறு அரசு துறைகளில் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 16வது நாளில் பல்வேறு துறையின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் பல்வேறு அரசு துறைகளில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனை அடுத்து இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில் பல்வேறு துறைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவை முன்பு கூடி முதலமைச்சர் ரங்கசாமி பயணித்த வாகனத்தின் மீது மலர் மழை போல மலர்களை தூவி தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Puducherry