ஹோம் /புதுச்சேரி /

புதுவையில் 50 ரூபாய்க்கு அட்டகாசமான இளநீர் மில்க் ஷேக் - தேடிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

புதுவையில் 50 ரூபாய்க்கு அட்டகாசமான இளநீர் மில்க் ஷேக் - தேடிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

X
கடை

கடை வியாபாரி

Puducherry | தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை அருகே இயற்கையான முறையில் இளநீர் மில்க் ஷேக் கடையை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார் சேகர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்க பெப்சி, கோக், உள்ளிட்டவைகளை தேடி செல்வார்கள். ஆனால் அவ்வகை பானங்கள் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்த பின்பு மக்கள் தன் கண்முன்னே தயார் செய்து கொடுக்கப்படும் பழச்சாறு, ஐஸ்கிரீம், மில்க் ஷேக்கை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர்.

என்னதான் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் என்று வாங்கி பருகினாலும், இயற்கையாக கிடைக்கக்கூடிய இளநீரை வைத்து தயார் செய்யப்படும் மில்க் சேஷக்கை குடிப்பதில் ஒரு தனி அலாதி சுகம் தான். இளநீர் மில்க் ஷேக் குடித்தவுடன் மீண்டும் ஒரு முறை பருக தோன்றும் அளவிற்கு சுவையுடன் தயார் செய்து கொடுக்கிறார் புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்த சேகர்.

இவர் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை அருகே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இளநீர் மில்க் ஷேக் கடையை 5 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். இந்த மில்க் ஷேக் கடையில் இயற்கையான முறையில் இளநீரை எடுத்து அதிலுள்ள தேங்காய் பத்தைகளுடன் கரும்பு சாறு கலந்து இளநீர் மில்க் ஷேக் தயாரித்து தரப்படுகிறது.

50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த இளநீர் மில்க் சேஷக்கை குடிப்பதற்கு அந்தப் புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில் உள்ள சேகர் கடையை தேடி சென்று இளநீர் மில்க் ஷேக்கை பருகி வருகின்றனர்.

குடியரசு தினக் கொண்டாட்டம்.. வண்ண விளக்கொளியில் மின்னும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்

சேகரும் கடந்த 5 வருடங்களாக லாபம் நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமல் சுவை மட்டுமே தனது குறிக்கோள் என்ற அடிப்படையில் நடத்திவருகிறார். மில்க் ஷேக்கை மனம் கோணாமல் புண் சிரிப்போடு விற்பனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Puducherry