முகப்பு /புதுச்சேரி /

காரைக்காலில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றம்.. பீதியடைந்த மக்கள்..

காரைக்காலில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றம்.. பீதியடைந்த மக்கள்..

X
காரைக்காலில்

காரைக்காலில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றம்

Climates Changes in Karikal | புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

  • Last Updated :
  • Karaikal, India

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் மாலை 4 மணிக்கு பிறகு புகை மூட்டமாக காணப்பட்டது. இது மாலை 5 மணிக்கு மேல் அதிகமாக காணப்பட்டது. இதனால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. காரைக்கால் மாவட்டத்திலிருந்து நாகை மாவட்ட எல்லை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட எல்லை வரை இந்த புகை மூட்டம் நீடித்தது.

மேலும், காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என தகவல் பரவியது. இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது வானிலை மாற்றம் காரணமாக பனிப்பொழிவு ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் தெரிவித்தனர்.

காரைக்காலில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றம்

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தின் அருகே உள்ளது நாகை மாவட்ட எல்லையான வாஞ்சூர் பகுதியில் தனியார் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளது. இங்கு நாள்தோறும் தொழிற்சாலை பணிகள் நடைபெற்று வரும் போது, இந்த தொழிற்சாலையில் இருந்து புகை வெளியே வருவது வழக்கம்.

இருப்பினும் இருமாவட்ட எல்லைப்பகுதிகளிலும் புகைமூட்டம் அதிகமாக இருந்ததால் நாகை மாவட்டத்தில் இருந்து காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள தொழிற்சாலைகளில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.

ஆனால், அங்கு விபத்து ஏதும் ஏற்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இருந்தபோதிலும் புகைமூட்டம் அதிகரித்து காணப்பட்டதை பார்ப்பதற்கு, தொழிற்சாலை பணிகளை நிறுத்த நாகப்பட்டினம் தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆகவே திடீரென ஏற்பட்ட புகை மூட்டம் பனி காரணமா? அல்லது தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையினால் ஏற்படும் மாசு காரணமா? என இருமாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து மக்களிடயே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry