முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக், கழிவுகள்.. நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்..

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக், கழிவுகள்.. நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்..

X
சங்கராபரணி

சங்கராபரணி ஆற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள்

Pondicherry Sangarabarani River | புதுச்சேரி சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பிறை கழிவுகள் லாரிகளில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றில் புதுச்சேரி, விழுப்புரம் மேம்பாலம் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் லாரிகளின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் லாரிகளில் கொட்டப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வில்லியனூர் காவல் நிலைய அதிகாரிகளும், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலர்களும் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கே, தொடர்ந்து தொழிற்சாலைகளின் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சங்கராபரணி ஆற்று தண்ணீரில், தொழிற்சாலை கழீவுகளும், குப்பைகளும் அதிக அளவில் கலப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்கராபரணி ஆற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry