முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

புதுச்சேரியில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

X
குருத்தோலை

குருத்தோலை ஞாயிறு

Pondicherry News| குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு புதுச்சேரியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கைகளில் தென்ன மர குருத்தோலைகளை ஏந்தி ஒசானா பாடல் பாடியவாறு ஊர்வலமாக  சென்றனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இயேசு கிறிஸ்து பட்ட துன்பங்களை கிறிஸ்தவ மக்கள் நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பு ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் குருத்தோலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளை கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள புனித அந்திரேயர் தேவாலயத்தில் பங்குதந்தை ஆரோக்கியநாதன் தலைமையில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி ஓசானா பாடல் பாடியபடி கோவில்களை சுற்றி வலம் வந்தனர்.

top videos

    இதே போல் மிகவும் பழைமைவாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், பிரசித்தி பெற்ற ஜென்மராக்கினி பேராலயம் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் பங்கு தந்தைகள் தலைமையில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, ஓசானா பாடல் பாடியபடி, பவனி வந்தனர். அதனை தொடர்ந்து பிரார்த்தனை, திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    First published:

    Tags: Puducherry