முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி ஓங்கார ஆசிரமத்தில் சித்ரா பௌர்ணமி வெட்டவெளி தியானம்!

புதுச்சேரி ஓங்கார ஆசிரமத்தில் சித்ரா பௌர்ணமி வெட்டவெளி தியானம்!

X
புதுச்சேரி

புதுச்சேரி ஓங்கார ஆசிரமத்தில் சித்ரா பௌர்ணமி வெட்டவெளி தியானம்

Pondicherry Ongara Ashram | புதுச்சேரியில் உள்ள ஓங்கார ஆசிரமத்தின் 52ம் ஆண்டு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெட்டவெளி தியானம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி ஓங்கார ஆசிரமத்தில் 52ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி வெட்டவெளி தியானம் புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது.

ஓங்கார ஆசிரம மகளிர் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஆசிரமத்தின் அதிபர் தவத்திரு கோடீஸ்வரன் கலந்து கொண்டு வெட்டவெளி தியானத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்து கூறினார்.

புதுச்சேரி ஓங்கார ஆசிரமத்தில் சித்ரா பௌர்ணமி வெட்டவெளி தியானம்

இந்நிகழ்வில் ஜீவன் முத்தர் பூஜ்ஜிய ஸ்ரீ மகரிஷி பிரவின் குமாரி, துறவி லட்சுமி பாயின் 90 வது ஜெயந்தி முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்தை ஓங்கார் ஆசிரமத்தின் மகா அதிபதி தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா திறந்து வைத்தார்.

அதன் பின்பு தவத்திரு சுவாமி ஓங்கார நந்தாவின் 99வது அருள் நூலான ஐயைந்து மகான்கள் பாகம் நான்கு வெளியிடப்பட்டது. ஓங்கார் ஆசிரமத்தின் துணைத் தலைவர் குமார் ராகவன் இந்த நூலை வெளியிட்டார். இதில் ஏராளமானோ கலந்து கொண்டு வெட்ட வெளி தியானத்தில் ஈடுபட்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry