முகப்பு /புதுச்சேரி /

“தாத்தா போட்டோவுக்கு போஸ் கொடுங்க” - முதலமைச்சர் ரங்கசாமியுடன் புதுச்சேரி பள்ளி குழந்தைகளின் கலகல செல்ஃபி!

“தாத்தா போட்டோவுக்கு போஸ் கொடுங்க” - முதலமைச்சர் ரங்கசாமியுடன் புதுச்சேரி பள்ளி குழந்தைகளின் கலகல செல்ஃபி!

X
குழந்தைகளுடன்

குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்துகொண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி

Children's Selfi With Pondicherry CM Rangaswamy | புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் பள்ளி சிறுவர்கள் ‘தாத்தா போட்டோவுக்கு போஸ் கொடுங்க’ என்று கூறி அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எப்போதுமே மக்களோடு மக்களாக எளிமையாக பழகக் கூடியவர் என்று பெயர் எடுத்தவர். அவர் செல்லும் இடங்களில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வருபவர்கள் அவரைப் பார்த்து போட்டோ எடுத்து செல்பி எடுத்து மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டிய அரங்கேற்றத்தை கண்டு ரசித்தார்.

மேலும், மேடைக்கு முன்னாள் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ரங்கசாமியை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுங்க என்று கூறினர்.

குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்துகொண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி

இதையும் படிங்க : ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.. புதுச்சேரியில் ஆய்வு செய்யும் மீன்வளத்துறை அதிகாரிகள்!

இதற்கு புன்சிரிப்போடு முதலமைச்சர் ரங்கசாமியும் அவரை சூழ்ந்து நின்ற குழந்தைகளுக்கு போஸ் கொடுத்து அமர்ந்திருந்தார். அப்போது அவரை பார்த்த குழந்தைகள் அவரிடம் செல்பி எடுத்தும், செல்போனில் போட்டோ எடுத்தும், கைகொடுத்தும் ஜாலியாக இருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமியை பரதநாட்டியம் பார்க்க விடாமல் குழந்தைகள் செய்த சேட்டை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

First published:

Tags: Local News, Puducherry