முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கிய சுட்டீஸ்

புதுச்சேரியில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கிய சுட்டீஸ்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் குழந்தைகள்

Puducherry | புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு எதிராக குழந்தைகள் போராட்டத்தில் இறங்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மொத்தமற்றும் சில்லறை விற்பனை மதுபான கடைகள் உள்ளன. இது இல்லாமல் 200-க்கும் மேற்பட்ட ரெஸ்ட்ரோ பார் என்ற பெயரில் புதிதாக மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் நகர் தொகுதி, காமராஜர் மணிமண்டபம் எதிரே சாமி பிள்ளைத் தோட்டம் பகுதியில் புதிதாக மதுபான கடையை திறக்க கலால் துறை அனுமதி அளித்துள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கடை திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மதுபான கடை திறப்பதற்காக ஆயத்த பணிகளில் கடை உரிமையாளர் ஈடுபட்டு வந்தார். இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமி பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மக்கள்

இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபான கடையில் மதுபான பாட்டில்கள் அடுக்குவதாக தகவல் அந்த பகுதியில் தீயாய் பரவியது. இதனை அடுத்து சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகளுடன் கடையின் முன்பு ஒன்று திரண்டு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

புதுச்சேரி - கடலூர் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்.. மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் வெற்றி!

இந்த போராட்டத்தில் பெரியவர்களுடன் சேர்ந்து பள்ளி குழந்தைகளும் கையில் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

First published:

Tags: Local News, Puducherry