முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் சாலை அமைப்பதில் ஊழல்.. நூதன முறையில் வெளிகொண்டு வந்த சமூக ஆர்வலர்!

புதுவையில் சாலை அமைப்பதில் ஊழல்.. நூதன முறையில் வெளிகொண்டு வந்த சமூக ஆர்வலர்!

X
சமூக

சமூக ஆர்வலர்

Puducherry | சிமெண்ட்டையும், ஜல்லியையும் பயன்படுத்தி போட்ட சாலைகளை கைகளால் பெயர்த்தும், துடைப்பதால் கூட்டி வாரிய சமூக ஆர்வலர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் கழிவுநீர் வாய்க்கால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரியாங்குப்பம் அருந்திபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே சிமெண்ட் ஜல்லி பெயர்ந்து பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாதபடி விபத்து ஏற்படும் வகையில் படுமோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அரசிடம் முறையிட்டும் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று இந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர்ராஜன் என்பவர் தரமற்ற சிமெண்ட் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்தும் துடைப்பத்தால் கூட்டியும் சிமெண்ட் சாலை தரமற்று இருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

மேலும் இந்த சாலை அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் எனவே இதன் மீது உரிய விசாரணை நடத்தி தரமற்ற சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry