முகப்பு /புதுச்சேரி /

மதுவிலக்கு கோரி புதுவை கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி வேடமணிந்து விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுவிலக்கு கோரி புதுவை கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி வேடமணிந்து விழிப்புணர்வு பிரச்சாரம்

X
புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry News | நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி புதுவை கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி வேடமணிந்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், புதுச்சேரியில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரையின் 94வது ஆண்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்றது.

மதுவிலக்கு கோரி புதுச்சேரி கடற்கரையில் நடந்த பிரச்சாரம்

மது விலக்கை வலியுறுத்தி அகில இந்திய காந்திய இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கருப்பையா மகாத்மா காந்தி வேடமனிந்து புதுச்சேரி கடற்கரை பகுதியில், பொதுமக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது பார்ப்பவர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. மேலும், உலக அமைதி தொண்டு நிறுவனத் தலைவர் ரமேஷ் மற்றும் புதுவை தமிழ் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடே மதுவிலக்கு குறித்து பிரச்சாரம் செய்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry