பர்மா உணவுகள் தமிழகத்திற்கு வந்து முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. 2ம் உலகப் போருக்குப் பிறகு தமிழகத்திற்கு அகதிகளாக பல்லாயிரம் பர்மியர் வந்தனர். அதில் தமிழரை மணந்த பர்மியரும் இருக்கின்றனர். அதன் காரணமாக பர்மியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பாரம்பரிய பர்மா உணவகங்களும் முளைத்தன. காலப்போக்கில் பர்மா உணவுகளுக்கு தமிழர்களும் அடிமையாகிவிட்டனர்.
பர்மா உணவுக்கடைகள் இப்போது தமிழகம் முழுவதும் பரவி விட்டது. ஏன் புதுச்சேரியில் கூட இந்த கடைகள் அதிகம் வந்துவிட்டன. தற்போது பர்மா உணவுகள் புதுவையில் கொடி கட்டி பறந்து வருகிறது. புதுச்சேரி காந்தி வீதியில் பர்மா கிங் கடைதான் பர்மா உணவுப்பிரியர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அத்தோ ரசிகர்களுக்கு பாரம்பரிய பர்மிய உணவுகள் மிகவும் ருசிகரமாக வழங்கப்படுகிறது.
ஒரு பெரிய பேசினில் மெலிதாக வெட்டிய முட்டைக்கோஸ், வெங்காயம் இவற்றுடன், உப்பு தண்ணீர், பூண்டு எண்ணெய், காய்ந்த மிளகாய் ஃப்ளெக்ஸ், பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்தெடுத்த மாவை கொஞ்சம் சேர்த்து பிசைகிறார்கள். அதில் உப்பு சேர்த்து வேக வைத்த அரிசி நூடுல்ஸ், நம்ம ஊர் தட்டுவடையின் சாயலில் கொஞ்சம் பெரிதாக இருக்கும் பேஜோவையும் உடைத்துப் போட்டு, கொஞ்சம் வாழைத்தண்டு சூப் சேர்த்து கலக்கி ஒரு கப்பில் அள்ளிப்போட்டு ஒரு ஸ்பூனைச் சொருகி தருகின்றனர்.
இதையும் படிங்க : பெட்டி தேனீ வளர்ப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி அசத்தும் தேனி தம்பதி!
மேலும் இதில் சிக்கன், முட்டை சேர்த்து பல அசைவ வகைகளும் வந்துவிட்டன. இத்துடன் 2 சைட்டிஷ்கள் உண்டு. ஒன்று மசாலா முட்டை. அவித்த முட்டையை கீரி, நாம் முதலில் பார்த்த உப்புத் தண்ணீர், பூண்டு எண்ணெய் , சில்லி ஃபிளேக்ஸ் திணித்து, மொறு மொறுப்பாக வறுத்த வெங்காயம் வைத்து தருவார்கள். நீங்கள் அதை வாங்கி அப்படியே முழுதாக வாய்க்குள் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இன்னொரு ஸ்பெஷல் வாழைத்தண்டு சூப், மீன் வேகவைத்த தண்ணீர் வாழைத்தண்டு, இரண்டும் முதலிடம் வகிக்கும் இந்த சூப் இல்லாமல் பர்மா உணவு இல்லை. இந்த அத்தோ தவிர, கௌஷி, மொய்ங்கா என்பவையும் பிரபலமாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அடுத்த முறை வரும்போது இதை முயற்சித்துப் பாருங்கள். உள்ளூர் வாசிகள் , மாலை வேளையில் காந்தி வீதி சென்றால் தவறவிடாமல் பர்மிய உணவுகளை ருசித்துப் பாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Local News, Puducherry