முகப்பு /புதுச்சேரி /

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா..

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா..

X
திருநள்ளாறு

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா

Thirunallaru Sridharparanyeswara Swami Temple | காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவில். சப்த விடங்கர் ஸ்தலங்களில் நகவிடங்கர் ஸ்தலமாகவும், நவக்ரஹ ஸ்தலங்களில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக விளங்கும் ஸ்தலமாகவும் திகழும் இக்கோவிலின் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.

கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு, ரிஷப கொடியை வீதியுலாவாக எடுத்துச் சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்த பின்னர், கொடி மரத்து கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்ச முர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா

இதையும் படிங்க : என்னது நம்ம ஈரோட்டில் உள்ள விவசாய நிலத்துல கங்கை தீர்த்தமா? குளித்தால் பாவம் விலகும் என ஐதீகம்!

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வரும் 23ம் தேதியும், பஞ்ச முர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா வரும் 28ம் தேதியும், 30ம் தேதி திருத்தேரோட்டமும், 31ம் தேதி ஸ்ரீ சனிபகவான் தங்க காகம் வாகனத்தில் வீதியுலாவும், ஜுன் 1ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீசெண்பக தியாகராஜ சுவாமி உன்மத்த நடனமாடி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் காட்சி வரும் 24ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.

    First published:

    Tags: Local News, Puducherry