முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி.. புதுவை நாணயங்களையும் வியந்து பார்த்த மாணவர்கள்!

புதுச்சேரி எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி.. புதுவை நாணயங்களையும் வியந்து பார்த்த மாணவர்கள்!

X
புதுச்சேரி

புதுச்சேரி எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி

Puducherry Book Fair | புதுச்சேரி எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட படைப்புகளும், புதுச்சேரி நாணயங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கல்லாடனார் கல்வி கழகம், தொண்டை மண்டல நாணயவியல் கழகம் மற்றும் உலக திருக்குறள் மையம் இணைந்து நடத்தும் புதுச்சேரி எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி முதலியார்பேட்டை ஒய்ஸ்மேன் பள்ளியில் நடைபெற்றது. இந்த ஒருநாள் கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் படைப்புகள், புதுச்சேரி இருந்து வெளிவரும் சிற்றிதழ்கள், நாளேடுகள் மற்றும் புதுச்சேரி நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதன் தொடக்க விழாவில் கல்லாடனார் கல்விக் கழகம் செயலாளர் ராசசெல்வம் தலைமை தாங்க, ஒய்ஸ் மேன் பள்ளி இயக்குனர் மதிவாணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலை பண்பாடு பெற இயக்குனர் கந்தன் என்ற சிவரசன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தொண்டை மண்டல நாணயவியல் செயலாளர் துரை சிவாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Puducherry