புதுச்சேரியில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிளான படகு காற்றில் நகர்ந்து அருகே இருந்த பாறையில் மோதியதில் கடல் நீர் புகுந்ததால் படகு கடலில் மூழ்கியது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம். மீனவரான இவர் தனக்கு சொந்தமாக படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மீன் பிடி தடை காலம் அமலில் இருப்பதால், தனது படகை புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் கட்டி வைத்து சென்றுள்ளார்.
இதனிடைய துறைமுகம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகலிங்கத்தின் படகை மாற்று இடத்தில் சரியாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், படகு காற்றில் பாறையில் மோதி அதன் அடி பாகம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அத்துடன், படகின் ஒரு பகுதி கடலில் முழ்கியது.
இது தொடர்பாக உரிமையாளர் நாகலிங்கம் கூறிய போது, கடலில் முழ்கிய படகின் மதிப்பு ரூ. 30 லட்சம் என்றும் அதற்கு அரசு உரிய நிவாரனம் வழங்க வேண்டும் எனவும், படகுகள் அதிகமானதால், அவை நிறுத்த போதிய வசதி இல்லாததால் இது போன்று விபத்துகள் ஏற்படுகிறது, இதனை அரசு கருத்தில் கொண்டு போதிய இடவசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boats, Local News, Puducherry