முகப்பு /புதுச்சேரி /

பாரதிதாசன் நினைவு தினம்.. புதுச்சேரியில் பாவேந்தர் பாடலை வீரமுடன் முழங்கிய சிறுமி!

பாரதிதாசன் நினைவு தினம்.. புதுச்சேரியில் பாவேந்தர் பாடலை வீரமுடன் முழங்கிய சிறுமி!

X
பாவேந்தர்

பாவேந்தர் பாடலை வீரமுடன் முழங்கிய சிறுமி

Bharathidasan Memorial Day : பாரதிதாசன் பாடலை பாடி புதுச்சேரி சிறுமி அஞ்சலி செலுத்தினார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவுச்சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பாரதிதாசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பாரதிதாசனின் பேரனான கோ.பாரதி தனது குடும்பத்தினருடன் வந்து பாரதிதாசனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அப்போது விவேகானந்தா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருதி, பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பாடல்களை பாடி நினைவஞ்சலி செலுத்தினார். இது பலரையும் கவரும் வகையில் அமைந்தது. அந்த சிறுமியை பலரும் பாராட்டினர். மேலும் பல்வேறு சமூக நல அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry