படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் 9 முதல் 16 வயதுள்ளபள்ளி மாணவர்களுக்குமாநில சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கான போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி, ஜவகர் சிறுவர் இல்லத்தில் நடந்த இந்தப் போட்டியில்பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ரகவுடு தலைமை தாங்கினார். 2023ம் ஆண்டிற்கான போட்டிகள் நேற்று, இன்று இரு தினங்கள் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மணிவேல் வரவேற்றார். போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இருந்து 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
படைப்பாற்றல் நிகழ்கலையில் நடனத்தில், பரதம், கிராமிய நடன போட்டிகளும் பாடலில் கர்நாடக இசை, கிராமிய பாடல்களும், இசைக்கருவி மீட்டலில் கர்நாடிக், கிராமிய இசைப் போட்டிகளும் நடைபெற்றது.நடன போட்டியில் வெல்வோருக்கு, மொத்தம் 8 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
படைப்பாற்றல் கலைப்பிரிவில், ஓவியம், சிற்பம், கைவினைப் போட்டிகள் நடந்தன. நடன போட்டியில் வெல்வோருக்கு, மொத்தம் 8 விருதுகள் வழங்கப்படவுள்ளன. படைப்பாற்றல் கலை பிரிவில், ஓவியம், சிற்பம், கைவினை போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவோருக்கு 3 விருதுகளும், படைப்பாற்றல் எழுத்து பிரிவில், கதை, கவிதை, கட்டுரை, உரைவீச்சு, கையெழுத்து போட்டிகளில் வெல்வோருக்கு 3 விருதுகள் வழங்கப்படுகிறது. அறிவியல் பிரிவில், வினாடி வினா, கட்டுரை, மாதிரி செய்தல், கலந்துரையாடல், விளக்கவுரை போட்டிகளில் வெல்வோருக்கு 2 விருதுகள் வழங்கப்படுகிறது.
சீட்டுக்கட்டு போல சரிந்த 60 அடி உயர குடிநீர் தொட்டி... புதுவை அரியாங்குப்பத்தில் புகை மண்டலம்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry