முகப்பு /புதுச்சேரி /

புதுவை பீச்சில் நிரந்தர கடைகளின் வியாபாரத்தை தட்டிப்பறிக்கும் சாலையோர கடைகள்.. வியாபாரிகள் குமுறல்!

புதுவை பீச்சில் நிரந்தர கடைகளின் வியாபாரத்தை தட்டிப்பறிக்கும் சாலையோர கடைகள்.. வியாபாரிகள் குமுறல்!

X
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை வியாபாரிகள்

Pondicherry News : வியாபாரிகள் சிலர் கடற்கரை சாலையோரங்களில் கடைகள் போடப்பட்டுள்ளதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி  காந்தி சிலை எதிரே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவை கடற்கரை அழகை மேம்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு அரசு கடற்கரை ஓரங்களில் சிற்றுண்டி மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு காந்தி திடல் அருகே இடம் ஒதுக்கி வியாபாரம் செய்ய அனுமதி வழங்கியது.

இந்தநிலையில் சமீபகாலமாக கடற்கரை ஓரங்களில் ஆங்காங்கே அனுமதி இல்லாமல் சிலர் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே காந்தி திடல் பகுதியில் வியாபாரிகள் சிலர் கடற்கரை சாலையோரங்களில் கடைகள் போடப்பட்டுள்ளதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி காந்தி சிலை எதிரே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry