முகப்பு /புதுச்சேரி /

பகாசூரன் படத்துக்கு இப்படி ஒரு புரோமோஷனா? ஊரையே திரும்பி பார்க்க வைத்த விளம்பரம்...

பகாசூரன் படத்துக்கு இப்படி ஒரு புரோமோஷனா? ஊரையே திரும்பி பார்க்க வைத்த விளம்பரம்...

X
பகாசுரனுக்கு

பகாசுரனுக்கு பக்காவா ப்ரோமோட் செய்த ரசிகர்கள்

Bagasuran movie | பகாசூரன் படம் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இயக்குனர் மோகன். ஜி ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார். மேலும் தொடர்ந்து செல்வராகவனை வைத்து பகாசூரன் என்ற படம் இயக்கி வருகிற 17-ஆம் தேதி தமிழக மற்றும் புதுவையில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் படத்தை புரொமோட் செய்வதற்கு இயக்குனர் சார்பாக பல்வேறு விளம்பரங்கள் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.. அதற்கு மேல் ஒரு படியாக சென்னையில் இருந்து சேலம் வரை கார் முழுவதும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டி பொதுமக்களிடையே ப்ரோமோட் செய்தனர்..

அதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அந்த விளம்பரம் செய்யப்பட்ட காரினை புதுச்சேரி ரசிகர்கள் வரவேற்றனர். மேலும் படத்தில் நடித்த நடிகர் பாண்டுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தனர். தொடர்ந்து புதுவையில் இருந்து மீண்டும் கொடியசைத்து அந்த விளம்பர காரினை வழி அனுப்பி வைத்தனர்.

First published:

Tags: Promotion, Puducherry, Tamil movies