முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் தீயணைப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரியில் தீயணைப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

X
விழிப்புணர்வு

விழிப்புணர்வு பேரணி

Puducherry News : புதுச்சேரியில் தீயணைப்பு சேவை வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு வாக்கத்தானில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி தீயணைப்புத்துறை சார்பில் ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வார கால தீயணைப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. தீயணைப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் தீயணைப்புத்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் பயணம் நடத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடற்கரை சாலையில் தொடங்கி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் தீயணைப்புத் துறை அருகே நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு வாக்கத்தானில் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பேரிடர் கால முதலுதவி முடித்த தன்னார்வலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

First published:

Tags: Local News, Puducherry