முகப்பு /புதுச்சேரி /

BIS ஹால்மார்க் தங்கம் விற்பனை.. புதுச்சேரி நகைக்கடை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு!

BIS ஹால்மார்க் தங்கம் விற்பனை.. புதுச்சேரி நகைக்கடை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு!

X
மாதிரி

மாதிரி படம்

BIS Hallmark Gold : பி.ஐ.எஸ் ஹால்மார்க் தங்கம் விற்பனை குறித்து நகைக்கடை வியாபாரிகள், உரிமையாளர்களுக்கு புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

பி.ஐ.எஸ் ஹால்மார்க் தங்கம் விற்பனை குறித்து நகைக்கடை உரிமையாளர்களுக்கு புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards) ஹால்மார்க் உள்ள தங்கங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தங்க வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை பி.ஐ.எஸ். கிளை நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில், பி.ஐ.எஸ் கிளை சென்னை நிறுவன இயக்குனர் பவானி மற்றும் துணை இயக்குனர் கௌதம் ஆகியோர் கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு நகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதில் பி.ஐ.எஸ். ஹால்மார்க் உள்ள தங்கங்களை மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். அடுத்தது எச்.யு.ஐ‌.டி-யின் முக்கியத்துவம் மற்றும் பி.ஐ. எஸ்.குறித்த ஆண்ட்ராய்டு ஆப் டவுன்லோட் செய்து எவ்வாறு விழிப்புணர்வுடன் அதை கையாள்வது என்பது குறித்தும் விவரமாக எடுத்துக் கூறப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள தங்க நகை கடை வியாபாரிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Puducherry