முகப்பு /புதுச்சேரி /

குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்திய புதுவை சுகாதாரத்துறை..!

குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்திய புதுவை சுகாதாரத்துறை..!

X
குடும்பக்

குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு நாடகம்

Puducherry News|புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகம் ஜிப்மர் மருத்துவமனை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கினார்.

வாசக்டமி எனப்படும் சிகிச்சை முறை ஆண்களுக்கு செய்யப்படுவதாகும். இது உடலில் கத்தி படாமல் ரத்தம் சிந்தாமல் செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். இதை ஆண்கள் செய்யும் பட்சத்தில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

Read More : தமிழ்நாடா - தமிழகமா என்று விவாதத்தைவிட இதுதான் அவசியம் - அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தங்களின் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு நடித்துக் காட்டி சிவகுரு ஞானம் நாடக கலை குழுவினர் விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியின் முடிவில் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராமப்புற செவிலியர் தனலட்சுமி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர் ஜெகநாதன், ஆஷா ஊழியர்கள் ரேணுகா, விருதாம்பாள் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry