முகப்பு /புதுச்சேரி /

அரியாங்குப்பம் திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவம் - தீமிதி திருவிழா கொடியேற்றம்..!

அரியாங்குப்பம் திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவம் - தீமிதி திருவிழா கொடியேற்றம்..!

X
அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவம்

Ariyankuppam Draupadi Amman Temple : புதுச்சேரி அரியாங்குப்பம் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் பிரமோற்சவ தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரமோற்சவ தீமிதிவிழா கொடியேற்ற நிகழ்வு மங்கல இசை உடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து சங்கராபரணி ஆற்றங்கரைக்குச் சென்று ஜலம் திரட்டி மலர்களால் பூங்கரகம் அலங்கரித்து ஸ்ரீ செடிலானும் சங்கவி நீர் மாரியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்து, சாகை வார்த்தால் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, தூராடி அய்யனார் கோவிலில் குதிரை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அனைத்து தெய்வங்களுக்கும் காப்பு கட்டி கொடியேற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னால் சேர்மன் ஆனந்தன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் அருள்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் அரியாங்குப்பம் தங்கவேல் பாஞ்சாலி அம்மாள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

அரியாங்குப்பம் திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், நிகழ்ச்சியில் அறங்காவல் குழுத்தலைவர் வீரப்பன். துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் செயலாளர் கமல் ஜோதி பொருளாளர் வரதப்பன் உறுப்பினர் கலையரசி மற்றும் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry