முகப்பு /செய்தி /புதுச்சேரி / தமிழர்களின் துரோகியாக அண்ணாமலை செயல்பட்டுள்ளார் - நாராயணசாமி குற்றச்சாட்டு

தமிழர்களின் துரோகியாக அண்ணாமலை செயல்பட்டுள்ளார் - நாராயணசாமி குற்றச்சாட்டு

அண்ணாமலை - நாராயணசாமி

அண்ணாமலை - நாராயணசாமி

தமிழர்களின் துரோகியாக அண்ணாமலை செயல்படுகிறார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கர்நாடக தேர்தலுக்காக நடந்த பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் தடுத்து நிறுத்தியுள்ளார். தமிழன் என தன்னை பறைசாற்றிக்கொள்ளும் அண்ணாமலை இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்துள்ளார். தமிழை ஈஸ்வரப்பா அவமதித்தத்திற்கு அண்ணாமலை சாட்சியாக இருந்து, தமிழர்களின் துரோகியாக செயல்பட்டுள்ளார் என நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் ஆளுநர் தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்துக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தடை அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் புதுவையிலும் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம்கூட வில்லியனூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ளார்.

top videos

    புதுவை அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவை சேர்ந்தவர்தான் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துகிறார். அவருக்கு சாதகமாக செயல்பட ஆன்லைன் சூதாட்டம் புதுவையில் தடை செய்யப்படவில்லை. சிறப்பு சட்டமன்றத்தை கூட ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டும் என கூறினார்.

    First published:

    Tags: Annamalai, BJP, Congress, Narayanasamy, Puducherry