முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் உடல் நலத்தை பெண்கள் பாதுகாத்திட விழிப்புணர்வு வாக்கத்தான்!

புதுச்சேரியில் உடல் நலத்தை பெண்கள் பாதுகாத்திட விழிப்புணர்வு வாக்கத்தான்!

X
வாக்கத்தான்

வாக்கத்தான் விழிப்புணர்வு

Puducherry News|உடல் நலத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் அமைப்புகள் சார்பில் பெண்களின் உடல் நலத்தை பாதுகாத்திட நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு வாக்கத்தான் நடை பயண போட்டி புதுவையில் நடைபெற்றது.

இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாக்கத்தான் போட்டியில் பல்வேறு கல்வி, தொழில் நிறுவனங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நகரின் பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் வரை நடந்து விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

இந்த வாக்கத்தானில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகள் 18 வயது முதல் 30 வயது வரையும் 31 முதல் 40 வயது வரையும் 41 முதல் 50 வரையும் 51 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது, ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Puducherry