முகப்பு /புதுச்சேரி /

அம்பேத்கர் படிப்பகத்திற்கு வந்த அவலநிலை.. கவனிக்குமா புதுச்சேரி அரசு?

அம்பேத்கர் படிப்பகத்திற்கு வந்த அவலநிலை.. கவனிக்குமா புதுச்சேரி அரசு?

X
அம்பேத்கர்

அம்பேத்கர் படிப்பகத்திற்கு வந்த அவலநிலை

Ambedkar Library In Abhishegapakkam | புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த அபிஷேகபாக்கத்தில் உள்ள அம்பேத்கர் படிப்பகம் கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த அபிஷேகபாக்கத்தில் அம்பேத்கர் படிப்பகம் உள்ளது. இந்த படிப்பகம் 47 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த படிப்பகம் மூலம் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு நடத்துவது மட்டுமல்லாமல், விளையாட்டு பொருட்கள், பல்வேறு கருத்தியல் புத்தகங்கள் வைத்துப் பராமரித்து வந்தனர்.

ஆனால், ஒட்டு கொட்டகையாக இருந்த படிப்பகத்தை கட்டிடமாக கட்டி தர அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அரியாங்குப்பம் பஞ்சாயத்து மூலம் கட்டிடம் மற்றும் 5 கடைகள் கட்டப்பட்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு கட்டிடத்தின் நடுப்பகுதியின் தரைத்தளம் திடீரென உள்வாங்கியது.

அம்பேத்கர் படிப்பகத்திற்கு வந்த அவலநிலை

இது சம்பந்தமாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கட்டிடம் கட்டும் இடத்தில் ஏற்கனவே பொது கிணறு இருந்ததும் அதை சரிவர மூடாமல் கட்டிடம் கட்டியதால் தரைதளம் உள்வாங்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இக்கட்டிடத்தை மீண்டும் புதுப்பிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க : புதுச்சேரியில் இன்று நிழல் இல்லா நாள்.. வியப்புடன் கண்டு ரசித்த பொதுமக்கள்..

அதன்பேரில் அரியாங்குப்பம் கொம்மியூன் பஞ்சாயத்து மூலம் சீரமைக்கும் பணி அந்நேரத்தில் மட்டும் தொடங்கப்பட்டு அதன் பிறகு எந்த வேலைகளும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது .இதனால் கழிவுநீர் தேங்கி செடிகொடிகள் வளர்ந்து புதார் மண்டி கிடப்பதோடு சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே அபிஷேகபாக்கம் அம்பேத்கர் படிப்பக கட்டடத்தை சீரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry