முகப்பு /புதுச்சேரி /

பாராகிளைடிங்கில் பறக்க ரெடியா..! புதுச்சேரியின் அழகை வானில் இருந்தே ரசிக்கலாம்..

பாராகிளைடிங்கில் பறக்க ரெடியா..! புதுச்சேரியின் அழகை வானில் இருந்தே ரசிக்கலாம்..

X
பாராகிளைடிங்கில்

பாராகிளைடிங்கில் பறக்க ரெடியா

ParaGliding in Pondicherry : வானத்துல பறந்துகிட்டே பாண்டிச்சேரியின் அழகையே பார்த்து ரசிக்கனுமா? அப்படினா உடனே கிளம்பி பாண்டி மெரினாவுக்கு வாங்க. 

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியின் அழகை வானில் இருந்து ரசிக்க பாண்டி மெரினாவில் பாராகிளைடிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 3 மணி நேர பயண தூரத்தில் உள்ள ஒரு அருமையான டூரிஸ்ட் ஸ்பாட் தான் பாண்டிச்சேரி. பிரெஞ்சு நாகரீகத்தை பறைசாற்றும் கட்டிடங்கள், பீச், பப்னு வைப் செய்யும் மாதிரி பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் புதுவையில் நிறைந்துள்ளது. மேலும் கோடை விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் தற்போது புதுவைக்கு வர தொடங்கியுள்ளனர்.

எப்போதும் சுற்றிப்பார்க்கும் இடங்கள் தவிர்த்துட்டு வானத்தில் பறந்துகொண்டே பாண்டிச்சேரியின் அழகையே பார்த்து ரசிக்கனுமா? அப்படி என்றால் உடனே கிளம்பி பாண்டி மெரினாக்கு வாங்க.

பாராகிளைடிங்

இதையும் படிங்க : Kanchipuram Weather Update : காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த 12 செ.மீ. மழை!

பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து துறைமுகம் செல்லும் அண்ணா சாலையில் இந்திரா காந்தி ஸ்டேடியம் பின்புறத்தில், பாண்டி மெரினா கடற்கரையில் இந்த பாரா கிளைடிங் சாகச அனுபவம் கிடைக்குது. நன்கு பயிற்சி பெற்ற பைலைட்டின் உதவியுடன் 'பேரா மோட்டரிங்' மூலம் இயக்கப்படும் பாராசூட் சாகச பயணம் பாண்டி மெரினாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் தொடங்கியுள்ளனர்.

பாண்டி மெரினா கடற்கரையில் இந்த பாராகிளைடிங் மூலம் வானத்தில் சுமார் 10 நிமிடம் பறந்தவாறே புதுச்சேரியின் கடற்கரை அழகை ரசித்து மகிழலாம். பாண்டி மெரினாவில் தொடங்கும் பாராசூட் பயணம், புதுச்சேரி கடற்கரை, பழைய துறைமுகம் வழியாக சென்று பாண்டி மெரினாவிற்கு மீண்டும் வந்து சேரும். தினமும் காலை, மாலை என இருவேளைகளில் இந்த பாராசூட் பயணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சாகச பயணத்துக்கு முன்பதிவு செய்ய பாண்டி மெரினா கடற்கரை சிறப்பு கவுண்ட்டர்கள் செயல்பட்டு வருது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் இந்த ட்ரிப்புக்கு முன்பதிவு செய்ய முடியும். 10 நிமிட பயணத்துக்கு கட்டணமாக ரூ.4,000 வசூலிக்கப்படுகிறது. ஒரு பறவை பறப்பதுபோல் Direct ஆகவே பறக்கும் அனுபவம் கிடைக்கும். ஃபிளைட்ல போனா கூட இப்படி ஒரு அனுபவம் கிடைக்காது. ஆனால் டிக்கெட் விலைதான் கொஞ்சம் அதிகமாக உள்ளது என இங்கு  வரும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    டிக்கெட் விலை கொஞ்சம் குறைக்கப்பட்டால் இந்த பாராசூட் பயணத்துக்கான வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. நீங்கள் Adventure Lover-ஆ புதுச்சேரிக்கு ட்ரிப் பிளான் பண்றீங்களா? அப்படி என்றால் பாண்டி மெரினாவுக்கு வந்து பாராகிளைடிங் சாகச பயணத்தை கண்டிப்பா என்ஜாய் பண்ணுங்க.

    First published:

    Tags: Local News, Puducherry, Travel