தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.
ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார். தீவிர முருக பக்தரான யோகி பாபு படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கடந்த வாரம் சிவராத்திரியை முன்னிட்டு யோகி பாபு காரைக்காலில் உள்ள ஸ்ரீதர்பானேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து காரைக்கால்அம்பகரத்தூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு ஆலயம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Comedy actor Yogi Babu, Karaikal, Local News, Puducherry