முகப்பு /புதுச்சேரி /

காரைக்கால் தர்பானேஸ்வரர் ஆலயத்தில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

காரைக்கால் தர்பானேஸ்வரர் ஆலயத்தில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

கோயிலில் தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு

கோயிலில் தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு

Actor Yogi Babu : புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஸ்ரீதர்பானேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரபல நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மகா சிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்கும் சிறப்பு யாக கால பூஜைகள் விடிய விடிய அதிகாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 9 திரவியங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், காரைக்காலுக்கு வந்த பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு காரைக்காலில் உள்ள ஸ்ரீதர்பானேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. காரைக்காலில் தர்பானேஸ்வரர் ஆலயத்தில் யோகி பாபு சாமி தரிசனம் செய்கிறார் என்ற செய்தி வெளியானவுடன் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு முன் திரண்டனர்.

First published:

Tags: Local News, Puducherry