புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் லியோ படக்குழுவினர் சிறப்பு பூஜை செய்தனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் தளபதி விஜய், திரிஷா, சஞ்சய்தத், நடித்துள்ள லியோ திரைப்படம் நாடு முழுவதும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் 67வது படமான லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல்வேறு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு தர்பானேஸ்வரர் கோவிலுக்கு வந்த இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் லியோ திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்கள்.
லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் சஞ்சய்தத் கடல் கண்ணன் உட்பட படக்குழுவினர் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் இவர்களுக்கு சிறப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Local News, Puducherry