முகப்பு /புதுச்சேரி /

சிம்பு ரசிகர் மன்றம் சார்பில் புதுச்சேரியில் இலவச மருத்துவ முகாம்..

சிம்பு ரசிகர் மன்றம் சார்பில் புதுச்சேரியில் இலவச மருத்துவ முகாம்..

X
சிம்பு

சிம்பு ரசிகர் மன்றம்

Pondicherry Simbhu Fans Club : புதுச்சேரி சிம்பு தலைமை ரசிகர் மன்றத்தினர் 21 ஆண்டுகளை நிறைவுசெய்து 22வது ஆண்டை வரவேற்று, இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி சிம்பு தலைமை ரசிகர் மன்றம் சார்பில் கடந்த 21 ஆண்டுகளாக புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது. இந்த ரசிகர் மன்ற சார்பில், சிம்பு நடித்த திரைப்படங்கள் வெளியாகும் போது கட்டவுட், பேனர் வைத்து பூஜைகள் செய்தும் பாலபிஷேகத்துடன் கொண்டாடுவார்கள்.

மேலும், திரைப்படம் வெற்றிபெற பல்வேறு கோவில்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி அசத்தி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள், படிப்பு உதவித்தொகை, மருத்துவ செலவுகள், ஏழை எளிய மக்களுக்கான அன்னதானம் உள்ளிட்ட சேவைகளை ரசிகர் மன்றத்தின் சார்பில் செய்யப்பட்டுகிறது.

சிம்பு ரசிகர் மன்றம்

இந்நிலையில், புதுச்சேரியில் நடிகர் சிம்பு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டு 21 ஆண்டு நிறைவடைந்து 22-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனை வரவேற்று கொண்டாடும் வகையில் புதுச்சேரி சிம்பு தலைமை ரசிகர் மன்றம் சார்பில் புதுவை சாரம் குயவர் பாளையம் பகுதியில் மன்ற தலைவர் பாபு தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் கண் மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட சுமார் 22 நோய்களுக்கான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு அதே இடத்தில் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry