முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் மயில்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி… நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகர் பார்த்திபன்!

புதுச்சேரியில் மயில்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி… நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகர் பார்த்திபன்!

X
நடிகர்

நடிகர் பார்த்திபன்

Puducherry News|புதுச்சேரி நடிகர் சங்கம் சார்பில் உயிரிழந்த நடிகர் மயில்சாமியின் 30-ம் நாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டு மயில்சாமியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவர் உயிரிழந்து 30-ம் நாள் நினைவு தினம் புதுச்சேரி நடிகர் சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மயில்சாமியின் நெருங்கிய நண்பரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நடிகர் மயில்சாமியின் திருவுருவப் படத்திற்கு நடிகர் பார்த்திபன் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Puducherry