முகப்பு /புதுச்சேரி /

பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க வருவோருக்கு காலை உணவு வழங்கும் கார்த்தி ரசிகர்கள்..

பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க வருவோருக்கு காலை உணவு வழங்கும் கார்த்தி ரசிகர்கள்..

X
பொன்னியின்

பொன்னியின் செல்வன் 2

Ponniyin Selvan 2 Movie Release : மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் நாளை ( 28ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது.

  • Last Updated :
  • Puducherry, India

பொன்னியின் செல்வன்-2 படம் பார்க்க வருவோருக்கு காலை உணவு இலவசமாக வழங்க இருப்பதாக புதுச்சேரி கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

லைகா புரடக்ஷன் (Lyca Productions) சுபாஷ்கரன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் நாளை ( 28ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிப்பில், ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்புகளை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா மூவியாக இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் PS 2 4DX இல் வெளியாக உள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் படத்தின் முதல் பாகத்திற்கு பின்னர் பொன்னியின் செல்வன் 2 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது. படம் நாளை (ஏப்ரல் 28) வெளியாகவுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து புதுவை ரசிகர்கள் கூறுகையில், பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் தமிழர்களின் வரலாற்றை போற்றும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

இதனிடையே நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் புதுவை மாநில தலைவர் ராஜ்குமார் பேசுகையில், பொன்னியின் செல்வன் படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு காலை உணவு கார்த்தி ரசிகர்களின் சார்பாக வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor Karthi, Ponniyin selvan, Tamil News