முகப்பு /புதுச்சேரி /

பொன்னியின் செல்வன் 2 வெற்றி பெறுவதற்காக காரைக்கால் சனீஸ்வரர் கோயிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்!

பொன்னியின் செல்வன் 2 வெற்றி பெறுவதற்காக காரைக்கால் சனீஸ்வரர் கோயிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்!

நடிகர் ஜெயம் ரவி பிரார்த்தனை

நடிகர் ஜெயம் ரவி பிரார்த்தனை

Actor Jayam ravi | பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் ஜெயம் ரவி காரைக்கால் தர்பானேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நடிகர் ஜெயம் ரவி நடித்து கடந்தாண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி காரைக்காலுக்கு வந்திருந்தார். காரைக்காலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றது போல் இரண்டாவது பாகமும் அமோக வெற்றி பெற வேண்டும் என்று வழிபாடு செய்தார்.

இவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.ஜெயம் ரவி காரைக்கால் தர்பானேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே பரவ ஏராளமான ரசிகர்கள் கோயில் முன்பு திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Actor Jayam Ravi, Local News, Ponniyin selvan, Puducherry, Temple