முகப்பு /புதுச்சேரி /

நடிகர் அஜித் பிறந்தநாள் : அன்னதானம் வழங்கிய புதுவை ரசிகர்கள்

நடிகர் அஜித் பிறந்தநாள் : அன்னதானம் வழங்கிய புதுவை ரசிகர்கள்

X
அஜித்

அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அன்னதானம்

Actor Ajith Birthday : புதுச்சேரி அஜித் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

திரை உலகில்  ‘தல’ என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை( மே-1 )முன்னிட்டு புதுச்சேரி பிரென்ட்ஸ் சிட்டி ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கபடுவது மட்டுமல்லாமல்  ரத்ததானம், கண் தானம், அன்னதானம், கல்வி உபகரணங்கள், வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

அதன்படி இன்று அஜித்தின் 52-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், இன்று புதுச்சேரி -கடலூர் சாலையில் உள்ள அந்தோனியார் கோயில் எதிரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அஜித் ரசிகர் மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அஜித் ரசிகர்கள்

இதில் அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.இது குறித்து மன்ற நிர்வாகி கூறும் பொழுது, அஜித்குமார் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டது. இதயும் கொண்டாட ரசிகர் மன்றம் சார்பில் பலகட்ட ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Actor Ajith, Local News, Pondicherry, Puducherry