முகப்பு /புதுச்சேரி /

325 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர்.... ஆரோவில்லில் விமரிசையாக நடைபெற்ற தண்ணீர் திருவிழா...

325 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர்.... ஆரோவில்லில் விமரிசையாக நடைபெற்ற தண்ணீர் திருவிழா...

X
ஆரோவில்

ஆரோவில் தண்ணீர் விழா

Puducherry News| ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் குளத்தில் குதித்து நீரில் விளையாடி மகிழ்ந்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகரவாசிகள் மற்றும் ”தண்ணீர் அனைவருக்கும்' என்ற அமைப்பினரும் இணைத்து, தண்ணீர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆரோவில் விசிட்டர் சென்டர் எதிரில் உள்ள குளக்கரையில், தண்ணீர் விழிப்புணர்வை வலியுறுத்தி 'வாட்டர் மேட்டர்ஸ் மேளா' என்ற நிகழ்ச்சி ஐந்து நாட்களாக நடத்தப்பட்டது. ஆரோவில் 50ம் ஆண்டு விழாவிற்கு 325 நாடுகளில்‌ இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர், நிகழ்ச்சி நடக்கும் குளக்கரையில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக பானையில் ஊற்றப்பட்டது.

பின்னர் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், ஆலங்குப்பம், இடையஞ்சாவடி, அன்னை நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களில் அந்த பானை நீர் ஊற்றப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நிகழ்ச்சியில், தண்ணீர் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் குளத்தில் குதித்து நீரில் விளையாடி மகிழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry