புதுச்சேரி பாகூரை அடுத்த தென்பெண்ணை ஆற்றின் கரை அருகில் அமைந்துள்ள சோழியான் குப்பம் குருவி நத்தம் மணமேடு பகுதியை சேர்ந்த விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் இரவு நேரத்தில் நெல், கரும்பு, கிழங்கு, மணிலா, காய்கறிகள் ஆகியவை விளையும் வயலில் புகுந்து நாசமாக்கி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் இரவு நேரத்தில் பன்றிகள் புகுவதை தடுக்க பல முயற்சிகள் செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பன்றிகள் வருவதை தடுக்க வேலி அமைத்தல் மருந்து தெளித்தல் போன்ற ஆலோசனைகளை வழங்கினர். இருந்த போதும் பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.மேலும் பன்றி தொல்லைக்கு பயந்து பலர் மாற்று விவசாயம் அல்லது விவசாயம் செய்வதையே நிறுத்தி விட்டனர். இந்தப் பன்றிகள் ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து ஓடை மற்றும் வாய்க்கால் வழியாக பாகூர், சேலியமேடு, அரங்கனூர், கிருமாம்பாக்கம், ரெட்டிச்சாவடி, பிள்ளையார் குப்பத்தில், உள்ள விவசாய நிலங்களில் புகுந்து சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மணிலா செடிகளை நாசமாக்கி இருக்கின்றன.
மேலும் பிள்ளையார் குப்பத்தில் உள்ள விவசாயி உமாசங்கர் என்பவர் தனது மணிலா சாகுபடி செய்யும் நிலத்தில் பன்றிகள் புகாதவாறு இணையதளத்தில் ஆராய்ந்து நிலத்தைச் சுற்றி தானியங்கி ஒலிபெருக்கியை அமைத்திருக்கிறார். இந்த ஒலிபெருக்கி மூலம் பன்றிகள் பயமுறுத்தும் வகையில் சிங்கம், யானை, புலி, நாய், ஆம்புலன்ஸ் போன்ற பயமுறுத்தும் வகையில் ஒலிகளை எழுப்பும் வகையில் செட் செய்துள்ளார்.இந்த முயற்சி நல்ல பலன் கொடுத்துள்ளது. இவரது நிலத்திற்கு பன்றிகள் வருவது கிடையாது என்கிறார்.
இந்த முயற்சியை மற்ற விவசாயிகளும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.இது சம்பந்தமாக விவசாயி உமாசங்கர் தெரிவிக்கையில் ”வீடுகளுக்கு அருகில் கழிவுகளை தின்று வந்த பன்றிகள் போதிய உணவு கிடைக்காததால் நீர்நிலை மற்றும் நிலத்தடியில் விளையும் கிழங்குகளை தோண்டி எடுத்து சாப்பிடும் குணமுடையது எனவே அவற்றை தடுக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்”....
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry