முகப்பு /புதுச்சேரி /

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த நல்ல பாம்பு.. பதறியடித்த நோயாளிகள்!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த நல்ல பாம்பு.. பதறியடித்த நோயாளிகள்!

X
பாம்பு

பாம்பு

Puducherry News| புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை வனத்துறை ஊழியர்கள் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி நகர பகுதி முதலியார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு ஒன்று செவிலியர் அறைக்குள் புகுந்துள்ளது.

இதனை பார்த்த பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் நாகராஜ் மற்றும் கோபி மருத்துவமனை ஷெல்ஃபில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து வனத்துறைக்கு எடுத்து சென்றனர், மக்கள் அதிகம் வந்து போகும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அருகில் இருக்கும் புதர்கள் மற்றும் தேவையில்லாத செடிகளை அகற்ற வனத்துறை ஊழியர்கள் அறிவுறுத்தி சென்றனர்.

First published:

Tags: Local News, Puducherry, Snake