முகப்பு /புதுச்சேரி /

சீட்டுக்கட்டு போல சரிந்த 60 அடி உயர குடிநீர் தொட்டி... புதுவை அரியாங்குப்பத்தில் புகை மண்டலம்..

சீட்டுக்கட்டு போல சரிந்த 60 அடி உயர குடிநீர் தொட்டி... புதுவை அரியாங்குப்பத்தில் புகை மண்டலம்..

X
சீட்டுக்கட்டு

சீட்டுக்கட்டு போல சரிந்த 60 அடி உயர குடிநீர் தொட்டி

Puducherry News : புதுச்சேரியில் சீட்டுக்கட்டு போல சரிந்த 60 அடி உயர குடிநீர் தொட்டி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் ஆர்.கே.நகரில் 1984ம் ஆண்டு கட்டப்பட்ட கூம்பு வடிவிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. குறைந்த கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பராமரிப்பு இன்றி விடப்பட்ட பழைய குடிநீர் தொட்டி சேதமடைந்து காட்சியளித்தது. சுமார் 60 அடி உயரம் கொண்ட அந்த தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இந்நிலையில், இதனை பாதுகாப்பாக இடித்து அகற்ற அப்பகுதி மக்கள், தொகுதி எம்எல்ஏ பாஸ்கரிடம் முறையிட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவியோடு குடிநீர் தொட்டியை வெடி வைத்து தகர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக குடிநீர் தொட்டியின் அடிப்பகுதி இடித்து வலுவிழக்க செய்யப்பட்டது.

அதன்பின் தொட்டியின் மேல்பகுதியில் துளையிட்டு, இரும்பு வடங்களை கட்டி, பொக்லைன் எந்திரங்கள் மூலம் இழுத்து கீழே விழ வைத்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு குடிநீர் தொட்டி முழுவதும் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் பயங்கர சத்தம் எழுந்ததுடன், கட்டுமான இடிபாடுகளால் புகை மண்டலமும் உருவானது. இதன்பின் குடிநீர் தொட்டி இடிபாடுகளை உடைத்து, அங்கிருந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின்போது பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது

First published:

Tags: Local News, Puducherry