ஆந்திராவில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பகுதியைச் சார்ந்த 7 பெண்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்வதற்காக 14 பெண்கள் ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த ஆட்டோ தனியார் பேருந்து ஒன்று மீது நேற்று மதியம் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பெண்கள் உடல்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
மேலும் 7 பெண்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் படுகாயம் அடைந்த 7 பெண்களையும் சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மரணம் அடைந்த பெண்களின் உடல்கள் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல் அறிந்து டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்குரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
இந்த தகவல் அறிந்த ஏனாம் எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக் காக்கிநாடா மருத்துவமனைக்கு விரைந்தார். அங்குசிகிச்சை பெற்று வரும் 7 பெண்களை சந்தித்து நலம் விசாரித்தார். பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். விபத்து குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தார்.
மேலும் படிக்க... பனை மரத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு படுத்து உறங்கிய நபர்... போராடி மீட்ட தீயணைப்புத் துறை...!
இதன் அடிப்படையில் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Puducherry