முகப்பு /புதுச்சேரி /

சாலையில் கேட்பாரற்று கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. ஒப்படைத்தவர்களை பாராட்டிய புதுச்சேரி காவல்துறை..

சாலையில் கேட்பாரற்று கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. ஒப்படைத்தவர்களை பாராட்டிய புதுச்சேரி காவல்துறை..

X
மாதிரி

மாதிரி படம்

Puducherry News | புதுச்சேரியில் சாலையில் தவறிவிட்ட ரூ.49 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டீ-கடை ஊழியர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அண்ணாசாலை - செட்டிவீதி சந்திப்பில் கேட்பாரற்று, பை ஒன்று சாலையோரம் கிடந்தது. அங்குள்ள டீ கடையின் மாஸ்டர் பெரியசாமி மற்றும் உரிமையாளர் பாலமுருகன், அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் உடன் அழைத்து வந்து, அந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதில், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அதிகளவில் இருந்தன. இவ்வளவு பணம் இருப்பதை கண்டு பதறிய இவர்கள் உடனடியாக பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தவறவிட்ட பணம் வெங்கட்டா நகரைச் சேர்ந்த சங்கர் உடையது என விசாரணையில் தெரியவந்தது. இவர் பணத்தை வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றபோது தவறி விழுந்தது என விசாரணையில் தெரிந்தது.

நேர்மையாக ஒத்தடைத்தவர்களை பாராட்டிய புதுச்சேரி காவல்துறை

இதையும் படிங்க : நாகர்கோவில் - நெல்லை, கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு..

இந்நிலையில் நேர்மையாக பணத்தை ஒப்படைத்த டீ கடையின் மாஸ்டர் பெரியசாமி மற்றும் உரிமையாளர் பாலமுருகன், ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் தலைமையில் பெரியக்கடை காவல்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்தும், பாராட்டு சான்றிதழ் கொடுத்ததும் கவுரவப்படுத்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Puducherry