முகப்பு /செய்தி /புதுச்சேரி / அண்ணா சாலையில் கிடந்த ரூ.49 லட்சம்... போலீசாரிடம் ஒப்படைத்த மூவருக்கு குவியும் பாராட்டு..!

அண்ணா சாலையில் கிடந்த ரூ.49 லட்சம்... போலீசாரிடம் ஒப்படைத்த மூவருக்கு குவியும் பாராட்டு..!

மூவருக்கு பாராட்டு

மூவருக்கு பாராட்டு

புதுச்சேரியில் அனாதையாகக் கிடந்த 49 லட்சம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்தவர்களுக்குப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அண்ணாசாலை-செட்டி தெரு சந்திப்பில் கடந்த 17ம் தேதி காலை பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.  இதனைக் கண்ட  அப்பகுதியைச் சேர்ந்த டீ கடை உரிமையாளர் பாலமுருகன், ஆட்டோ ஓட்டுனர் பாண்டியன், டீ குடிக்க வந்த இளைஞர் வினோத்  ஆகியோர் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்  பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பையை மீட்டு சோதனை செய்ததில் அதில் ரூ.500 கட்டுகள் பணம் இருந்தது.

காவல் நிலையம் எடுத்துச் சென்று எண்ணிப் பார்த்ததில் ரூ.49 லட்சம் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அதனை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து உரிமையாளரைக் கண்டறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலை கடக்கும் போது பையைத் தவறவிட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, க நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வெங்கட்டா நகரில் வசிக்கும் வட மாநில தொழிலதிபர் சங்கர் போர்வால் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் பணத்தை முறைப்படி பெற்றுக்கொள்ள கோர்ட்டை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : சிட்டுக்குருவிகளை காப்பாற்ற பொதுமக்களுக்கு கூண்டுகள் வழங்கும் சமூக ஆர்வலர்...

பணத்தை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த பாலமுருகன்,  பாண்டியன் மற்றும் வினோத் கண்ணன் ஆகியோரை போலீசார் பெரியகடை காவல் நிலையத்திற்கு அழைத்து கௌரவித்தனர். கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் அவர்களின் நேர்மையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்தினார் மாஜிஸ்திரேட் விசாரணைக்குப் பிறகு பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் தெரிவித்தார்.

First published:

Tags: Money, Puducherry