முகப்பு /செய்தி /புதுச்சேரி / கோயில் நிலத்தை அபகரித்த கும்பல்... போலி ஆவணம் தயாரித்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது..!

கோயில் நிலத்தை அபகரித்த கும்பல்... போலி ஆவணம் தயாரித்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது..!

கோயில் நிலத்தை அபகரித்த கும்பல் கைது

கோயில் நிலத்தை அபகரித்த கும்பல் கைது

Puducherry | புதுச்சேரியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.12.49 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மோசடி வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12.49 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, மனைகளாக விற்பனை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரடி நிலம், ரெயின்போ நகர், 7 வது குறுக்கு தெருவில் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 12.49 கோடி. இந்த நிலத்தை சிலர் கடந்த 2021ம் ஆண்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்தனர். இதை அறிந்த கோவில் செயலாளர் சுப்ரமணியன் சிபிசிஐடி போலீசில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தார்.

இது குறித்து போலீஸ் குழுவினர் அரசு அலுவலகங்களில் நடத்திய விசாரணையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலியான உயில் தயாரித்து, 17 பேரிடம் மனைகளாக விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த மோசடியை விசாரிக்க டிஜிபி மனோஜ்குமார் லால் உத்தரவின்பேரில், எஸ்.பி., மோகன்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் அரசு அலுவலக ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில், கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரடி நிலத்தை 31,204 சதுரடி பரப்பு பகுதியை, சென்னை திருவான்மியூர் ரத்தினவேல்,( 54 வயது) அவரது மனைவி மோகனசுந்தரி, (49 வயது) சென்னை குன்றத்துார் மனோகரன்(, 53வயது) புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி பழனி, (73 வயது) மற்றும் சிலர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனைகளாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க... கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய் கைது...!

இதைத் தொடர்ந்து நால்வரும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி கைது செய்யப்பட்டனர்.தொடர் விசாரணையில், கோவில் நிலத்தின் மொத்த சொத்திற்கும் போலியான உயில் சாசனம் எழுதிய முத்தியால்பேட்டை தச்சர் பெரியநாயகிசாமி (71வயது), அவரது மகன் ஆரோக்கியதாஸ் (எ) அன்பு, (47வயது); துணிக்கடையில் பணியாற்றும் ஆரோக்கியராஜ் பிரான்சுவா (எ) ராஜ், (37வயது) முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன், (43வயது) ஆகியோர் செய்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நால்வரையும் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இது பற்றி எஸ்.பி., நாரசைதன்யா கூறுகையில், “கோவில் நிலத்திற்கு போலி உயில் தயாரித்து, வீட்டு மனையாக மாற்றி 17 அப்பாவிகளிடம் விற்பனை செய்துள்ளனர். இந்த வழக்கில் பத்திர பதிவு செய்தது யார், போலி ஆவணம் தயாரிக்க உதவியது யார் என தொடர் விசாரணை நடக்கிறது. அந்த பகுதியில் நிலப்பதிவை நிறுத்த பத்திர பதிவு துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டது” என்றார்.

First published:

Tags: Puducherry, Temple land