முகப்பு /புதுச்சேரி /

ஒரே கல்லில் 32 அடி உயரத்தில் பிரம்மாண்ட மாதா.. கவனத்தை ஈர்க்கும் வில்லியனூர்!

ஒரே கல்லில் 32 அடி உயரத்தில் பிரம்மாண்ட மாதா.. கவனத்தை ஈர்க்கும் வில்லியனூர்!

X
தூண்

தூண் மாதா

Puducherry News | புதுச்சேரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், வில்லியனூர் மாதா ஆலயத்திலும் அன்னைக்கு கருங்கல்லாலான சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழ் மரபிலே பல்லவர் காலம் தொடங்கி, சேர, சோழ, பாண்டியர்கள் உள்ளிட்டோர் கட்டிய கோவில்கள் எல்லாம் கருங்கல்லினால் உறுதியாக கட்டப்பட்டன. இந்நிலையில், சோழ மன்னர்களின் கட்டட கலை மற்றும் சிற்ப கலையை நினைவு கூறும் வகையில், புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது.

அந்த வகையில், புதுச்சேரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், வில்லியனூர் மாதா ஆலயத்திலும் அன்னைக்கு என்று கருங்கல்லாலான சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகத்திலேயே முதன் முறையாக ஒரே கருங்கல்லால் ஆன மிகப்பெரிய சொரூபமாக வில்லியனூர் மாதா கோவிலில் சிலை இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த வில்லியனூர் மாதா கோவிலானது, பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் உள்ள மாதா சொரூபம் ஒரு கருங்கல் தூணில் சிறிய அளவில் காட்சி கொடுக்கும். அதே போன்று இங்கும், ஒரே கல்லில் மாதா சொரூபம் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பமானது, நங்காத்தூர் என்ற ஊரில் வடிவமைத்து இங்கே கொண்டு வந்து நிறுவப்பட்டுள்ளது. 32 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தூனாக இது இருப்பது கூடுதல் சிறப்பு.

இங்கே வருபவர்கள் எல்லாம் அன்னையின் இந்த திருவுருவ சிலையை பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.

top videos

    வில்லியனூர் மாதா கோவிலில் உலகத்திலே உயரமான, ஒற்றைகல் மாதா கல்தூன் என்று சொல்லப்படும் இது, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    First published:

    Tags: Local News, Puducherry