முகப்பு /புதுச்சேரி /

போற்றுதலுக்குரிய மதநல்லிணக்கம்.. புதுச்சேரியில் கிறித்தவர்களை நெகிழ்வித்த இந்துக்கள்..!

போற்றுதலுக்குரிய மதநல்லிணக்கம்.. புதுச்சேரியில் கிறித்தவர்களை நெகிழ்வித்த இந்துக்கள்..!

X
பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

St Jayarakini Annai cathedral Pondicherry | புதுச்சேரி புனித ஜெயராக்கினி அன்னை பேராலயத்தில் தேர் பவனி நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான புனித ஜெயராக்கினி அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தின் 308வது ஆண்டு விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரியில் கிறித்தவர்களை நெகிழ்வித்த இந்துக்கள்

இதனைத்தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. மேலும் ஆடம்பர தேர் பவனியும் நடைபெற்றது. தேர்பவனி மாரியம்மன் கோவில் வீதியில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு வசிக்கும் இந்து குடும்பத்தை சேர்ந்த பெண்கள் தேரின் முன்பு சாலையில் நீர் ஊற்றி, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி அன்னைக்கு பூஜை செய்தனர். இந்த சம்பவம் கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகுந்த நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry