முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் கொட்டித்தீர்த்த கனமழை.. வேரோடு சாய்ந்த பழமையான வேப்ப மரம்!

புதுச்சேரியில் கொட்டித்தீர்த்த கனமழை.. வேரோடு சாய்ந்த பழமையான வேப்ப மரம்!

X
சாய்ந்த

சாய்ந்த வேப்பமரம்

Puducherry | புதுச்சேரியில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் பெய்த திடீர் மழையின் காரணமாக, புதுச்சேரி நகர பகுதி பெருமாள் கோயில் வீதி ஆம்பூர் சாலை சந்திப்பில் இருந்த 30 ஆண்டு பழமை வாய்ந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயனைப்பு வீரர்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால் அவ்வழியே வரும் வாகன ஒட்டிகள் மாற்று பாதையில் சென்றனர்.

ALSO READ | கோடை வெயிலுக்கு குளுகுளு.. புதுச்சேரியில் பழைய சோறுக்கு படையெடுக்கும் மக்கள்!

மேலும், மரம் சாய்ந்து விழும் நேரத்தில் அவ்வழியே வாகன ஒட்டிகள் யாரும் செல்லாததால்உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் பெய்த மழை காரணமாக வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry