முகப்பு /புதுச்சேரி /

உடுக்கை இசைத்துக்கொண்டே ஆடி உலக சாதனை..! புதுச்சேரியில் 2,000 நாட்டிய கலைஞர்கள் புது முயற்சி..!

உடுக்கை இசைத்துக்கொண்டே ஆடி உலக சாதனை..! புதுச்சேரியில் 2,000 நாட்டிய கலைஞர்கள் புது முயற்சி..!

X
உடுக்கை

உடுக்கை இசைத்துக்கொண்டே ஆடி உலக சாதனை

Pondicherry World Record in Bharathanatiyam : புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் உடுக்கையை இசைத்துக்கொண்டே ஆனந்த தாண்டவம் ஆடி புதிய உலக சாதனை படைத்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் பாரம்பரிய இசைக்கருவியான உடுக்கையை பயன்படுத்தி அதனை இசைத்துகொண்டே நாட்டியம் ஆடும் கலையை உலக அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் சங்கமம் குளோபல் அகாடமி சார்பில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது.

உடுக்கை இசைத்துக்கொண்டே ஆடி உலக சாதனை

இந்த சாதனை நிகழ்ச்சியில் மலேசியா, இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு உடுக்கை வாத்தியம் இசைத்துக்கொண்டே தொடந்து 8 நிமிடம் நடனமாடி புதிய உலக சாதனை படைத்தனர்.

இந்த புதிய சாதனை நிகழ்ச்சி யுனிக் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது மேலும் புதிய சாதனை படைத்ததற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்தா, நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry