முகப்பு /புதுச்சேரி /

"ஹாலிடே ஜாலிடே" தேர்வுகள் முடிந்த குஷியில் மாணவ-மாணவிகள் கொண்டாட்டம்!

"ஹாலிடே ஜாலிடே" தேர்வுகள் முடிந்த குஷியில் மாணவ-மாணவிகள் கொண்டாட்டம்!

X
பள்ளி

பள்ளி மாணவர்கள் உற்சாகம்

Puducherry News | தேர்வுகள் நிறைவடைந்ததால் உற்சாகம் அடைந்த மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி சட்டையில் மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. புதுச்சேரியில் இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி தேர்வாக தாவரவியல், உயிரியல், வரலாறு, அடிப்படை மின் பொறியியல், வணிக கணிதம், அலுவலக மேலாண்மை ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள் தேர்வுகள் நிறைவடைந்ததால் உற்சாகம் அடைந்தனர்.

அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி சட்டையில் மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகமாக துள்ளிக் குதித்தனர். சில மாணவ-மாணவிகள் பள்ளி பருவம் முடிந்ததால், பிரிவை நினைத்து கண்ணீர் சிந்தியதையும் பார்க்க முடிந்தது.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry, School students