முகப்பு /புதுச்சேரி /

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.. புதுவை பெத்தி செமினார் பள்ளியில் 175வது ஆண்டு விழா

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.. புதுவை பெத்தி செமினார் பள்ளியில் 175வது ஆண்டு விழா

X
புதுவையின்

புதுவையின் தனியார் பள்ளி 175 வது ஆண்டு விழா

Puducherry News | புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியின் 175ம் ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி என்றாலே மணக்குள விநாயகர் ஆலயம், கடற்கரை சாலை, காந்தி திடல், அரவிந்தர் ஆசிரமம் என சுற்றுலாத்தலமாக திகழும் மாநிலத்தில் பள்ளி என்றாலே அனைவருக்கும் தெரியக்கூடியது பெத்தி செமினார் என்ற தனியார் பள்ளி தான். ஏனென்றால் சுமார் 175 ஆண்டு காலமாக இப்பள்ளி உள்ளது.

புதுவை நகரப் பகுதியில் உள்ள பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி 1792ம் ஆண்டு குருமடமாகவும், கல்லூரியாகவும் தொடங்கப்பட்டது. இப்போது அமைந்துள்ள இப்பள்ளி 1844ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1846 மார்ச் 19ம் தேதி பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளி தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1932ம் ஆண்டு இப்பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் அங்கீகாரம் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

1934ம் ஆண்டு முதல் குழு மாணவர்கள் தேர்வை சந்தித்து அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 1978ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது 7 ஆயிரத்து 646 மாணவர்கள் படித்து வருகின்றனர். 220 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்த பெரும்பான்மையான மாணவர்கள் மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம் என தொழில் சார்ந்த இடங்களில் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில். புதுவையில் பெத்தி செமினார் தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 175வது ஆண்டு விழா 3 நாட்களாக பள்ளி வளாகத்தில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது நாள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் 70 வயதான அப்போதைய மாணவர் முதல் கடந்தாண்டு படிப்பை முடித்த மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் 95 வயது ஆசிரியர் கலந்து கொண்டு தங்களின் நினைவுகளை பகிர்ந்தனர். 50 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் அவர்கள் நண்பர்களுடன் கட்டித் தழுவி ஆரவாரமாக இருந்தது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது.

மேலும் 3 தலைமுறைகாக ஒரே பள்ளியில் படித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு விழாவில் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.  முன்னாள் மாணவர்கள் தற்போது படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி உதவிக்கரம் நீட்டினர்.

First published:

Tags: Local News, Puducherry